துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தார்
சிலுவையிலே ஜெயம் எடுத்தார்
ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார்
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை
அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா
பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால்
அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்
சுமந்து தீர்த்தார் நம் பெலவீனங்கள்
சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார்
சுகம் செல்வம் நம் உரிமை சொத்து