ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார்
திருநாமத்தினாதரவில் - ஸ்தோத்திரம்
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் மா பெறும்
மன்னவனே உமக்கு - ஸ்தோத்திரம்
ஜீவப் புதுவழியாய்
நின்னடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் - ஸ்தோத்திரம்
இப்புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் - ஸ்தோத்திரம்
கூட நின் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - ஸ்தோத்திரம்
யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே - ஸ்தோத்திரம்