But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் - எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே - நல் மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தேமேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்தப் பூலோக நாட்டமும் குறைகின்றதேமாயையில் மனம் இனி வைத்திடாமல் - நேசர் காய மதை எண்ணி வாழ்ந்திடுவேன் - ஆனந்தநம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை - இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரேபாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்தப் பாரதில் எனை வெற்றி சிறக்கச் செய்தே - ஆனந்தஅற்புதமாம் அவர் நேசமது - எந்தன் பொற்பரன் சேவை என் சொந்தமதுபற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை கற்புடன் அவர் பணி செய்திடவே - ஆனந்தகானானின் கரையிதோ காண்கிறதே - எந்தன் காதலன் தொனி காதில் கேட்கின்றதேகாலம் இனி இல்லை உணர்ந்து கொண்டேன் - விரை வாக என் ஒட்டத்தை தொடர்ந்திடுவேன் - ஆனந்தஅழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் - தம் அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் - அங்கு பிழைத்திடவே அன்பர் சமூகமதில் - ஆனந்தஜெபமதைக் கேட்டிடும் ஜீவனுள்ள தேவன் என் பிதா ஆனதால் ஆனந்தமேஏறெடுப்பேன் என் இதயமதை - என்றும் மாறாமல் பதில் தரும் மன்னனிடம் - ஆனந்த