என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
நம்பினோரை கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்
நம்புவதில்லை தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும் - நெஞ்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் - நெஞ்
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றம் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே - நெஞ்
என்றும் அழிந்திட விட்டுவிடார்
தம் சமூகம் நித்திய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே - நெஞ்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே - நெஞ்