நீளமும் வீதியும் ஆராய்ந்திட
சிநேகிதரில் நின்றென்னைப் பிரித்தீரோ இயேசுவே
உம்மோடு கூடவே வாசம் நான் செய்யவே
தேவாதி தேவனின் நேச புத்திரன்
தூதரவர் துதிகளையும் தூயரவர் மகிமையையும்
தூரவே விட்டிறங்கி மண்ணிலே வந்தாரே
இகலோக ராஜ்யங்கள் தேடிடாமல்
நித்யமாம் யாகமாய் இரத்தமும் விட்டாரோ
இன்பமாம் சிநேகிதரின் சிநேகமுமுண்டு
மறந்துபோம் இவையாவும் பனியையும் போலவே
மாதா பிதாக்களும் மறைந்து போவார்
பிரியாதென் கூடவே வருகின்றார் இயேசுவே
நீரே என் நித்யமாம் சுதந்தரமாமே
இப்பூவில் மட்டுமோ நித்ய நித்ய யுகங்களாய்
என் ஆத்ம நேசரோடே வாழுவேன் நித்யமாய்