அடித்து திருத்துவதில் தந்தையாகுவார்
வறுமை நேரத்திலே வள்ளலாகுவார்
- இல்லத்தின்
தனிமையிலே தியங்கும் போது துணைவராகுவார்
கலங்கும் எந்தன் பாதையிலே காவலன் ஆவார்
- இல்லத்தின்
எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு
ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு
- இன்ப இல்லத்தின்
வேதனையைக் கண்டு தினமும் மனதுருகுவார்
கவலையற்ற வாழ்க்கையினை கர்த்தர் தருகிறார்
- எந்தன் இல்லத்தின்
கணப்பொழுதில் மரித்தோர்கள் மீண்டும் எழும்புவார்
கர்த்தரோடு நாமும் அன்று ஆகாயம் செல்வோம்
பரமானந்தம் கொள்வோம்
- இல்லத்தின்