இன்ப இயேசுவின் மோட்ச வீடே
புவி யாத்திரை தீர்ந்திடும் போதே
பரலோகம் அழைத்திடுமே
என்னை வந்தவர் சேர்த்து கொள்வார்
கண்ணீர் யாவையுமே மிக அன்புடனே
கர்த்தர் தாமே துடைத்திடுவார்
இப்புவி எந்தன் சொந்தமல்ல
இன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசு
இலக்கை நோக்கி தொடருகிறேன் - எந்தன்
அடைவேன் மறுரூபமாக
புதுராகம், குரல் தொனியோடே
புதுப்பாட்டும் பாடிடுவேன் - எந்தன்
பரமானந்தம் வேறில்லையே
அங்கு சேர்ந்து அவர் முகம் காண்போம்
ஆவல் தீர அணைத்துக் கொள்வேன் - எந்தன்
உன்னத அழைப்பை ஈந்தீரே
தவறாமலே காத்த கரத்தில்
தருவேன் என் ஆவியை நான் - எந்தன்