இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மை துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம் - இஸ்ரவேலின்
ஆரவாரத்து முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்துத் தகர்த்திடுமே - இஸ்ரவேலின்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போதெல்லாப் புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே - இஸ்ரவேலின்
ஏக சத்தமாய்த் துதித்துப் பாடவே
ஆலயம் மகிமையால் நிறம்பின துப்போல
ஆலயமாம் எம்மைப் புவி காண
உம் மகிமையால் நிரப்பிடுமே - இஸ்ரவேலின்
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
உம் ஆவியானவரால் - இஸ்ரவேலின்