எந்தன் உள்ளம் அன்பினால் நிறையுதே
இன்ப இயேசுவே வேகத்தில் வருவார்
எந்தன் துன்பமெல்லாம் அன்று தீருமே
நான் புதுப்பாட்டு என்றும் பாடுவேன் - ஆ
ஆத்மநாதனோடு எந்தன் வாசம் ஆனந்தம்
ரட்ஷகனாம் இயேசுவின் சமூகம் போதுமே
தேவ மகிமையில் பறந்து நான் செல்லுவேன்
ஆகஷணத்தில் இயேசு என்னைச் சந்திப்பார்
ஆ! எந்தன் பாக்யம் யார்க்கும் வர்ணிப்பேன் - ஆ
லாபமான யாவையும் வெறுத்துத் தள்ளினேன்
ஆ! லட்ச லட்ச தூதர் முன்பாக
நான் ஜீவ கிரீடம் அன்று சூடுவேன் - ஆ
ஜீவ விருட்சத்தின் பலன் நான் புசிப்பேனே
ஜீவ பரதீசில் நானும் இளைப்பாறுவேன்
நான் இயேசுவோடு அங்கு வாழுவேன் - ஆ
விண் தூத சைன்யத்தையும் அங்கு காணுவேன்
பொன்னின் முடியோடு அதிவேகம் - காணுவேன்
நான் விண்ணிலே பாடிப் போற்றுவேன் - ஆ