எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது - எந்நா
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து - எந்நா
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி
நித்தியமாய் உன் ஜீவனை மீட்டதால் - எந்நா
நன்மையாலுன் வாயை
உன் வயது கழுகைப் போல் பலன் கொண்டு
இன்னும் இளமைபோலாகவே செய்ததால் - எந்நா
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது - எந்நா
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே?
மண்ணில் உன் பாவம் அகன்ற தூரமே - எந்நா
தந்தை தன் பிள்ளைகட்டு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - எந்நா