என் கண்களை ஏறெடுப்பேன்
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் - எனக்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை ஏந்நாளும்
ஆறுதல் எனக்கவரே - எனக்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே - எனக்
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே - எனக்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் - எனக்