தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே
மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம்சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார் - தேவ
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார் - தேவ
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திருப்பேன் - தேவ
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன் - தேவ
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக் கென்றே
சாட்சியாய் முடித்திடுவார் - தேவ
சாந்தமும் பொறுமையும் உள்ளவனே
ஜீவக்கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான் - தேவ
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார் - தேவ