பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே
மைந்தரெமை சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம் - போற்றி
கருணையால் ஜெனிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே - போற்றி
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மை தம் சுதராய் - போற்றி
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே - போற்றி
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே - போற்றி