எம் தேவரீரை இவ்வேளையிலே - நன்றியுடனே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
மங்கிடாமலே தங்கிட வேணும் - போற்று
அணைத்து எடுத்தோனே
ஆழி தன்னிலெம் பாவம் எறிந்த
அன்னை உத்தமனே
மன்னவனையே - மண்ணதினிலே - போற்று
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே
கருணாநிதியே பரிகாரியே - போற்று
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தோனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க - போற்று
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கானம் பாடியே துதித்திடுவேன் - போற்று