மறுரூபம் ஆகணுமே தகப்பனே - ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே