வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவி துன்பங்கள் மறைந்திடுதே
இயேசுவின் இராஜ்ஜியம் நெருங்கிடுதே
ஆமென் வாரும் இயேசுவே! (2)
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
அவர் வரும் வேளைக்காய் காத்திடுவோம் - ஆ ஆமென்
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் - ஆ ஆமென்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையை காத்துக் கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார் - ஆ ஆமென்
மணவாளன் சத்தமும் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் - ஆ ஆமென்