வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே - வான்
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
கர்த்தன் தன் சேனை கொண்டு காத்திடுவாரே - வான்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே - வான்
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே - வான்
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே - வான்
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் - வான்